Sunday, December 18, 2016


சமீப காலத்தில் மனதை மிகுந்த வேதணைக்குள்ளாக்கிய நிகழ்வு "வாற்தா" புயலினால் சென்னையில் ஏற்பட்ட மரங்களின் மரணம் தான்.
இது இயற்கையின் நிகழ்வு தான் , தடுக்க முடியாது தான் ஆனால் இதன் பாதிப்பு நமக்கு ஏப்ரல், மே மாதங்களில் தான் தெரியும். சென்னையின் மக்கள் தொகைக்கு இருக்கின்ற மரங்களே போதாது எனும் சூழலில் இருப்பவையும் போய்விட்டால்???
அதாவது மிகப்பெரிய பிராணவாயு தொழிற்சாலையை இழந்துவிட்டோம்.
இனி நம்மால் செய்ய முடிந்தவை புதிதாக மரக்கன்றுகளை நடுவது தான் அதுவும் indigenous variety எனப்படும் இந்த மண்ணின் மரங்கள நடுவது தான். (வேம்பு,அரச மரம், தெண்ணை போன்றவை)
நம் சந்ததிகளுக்கு சொத்து சேர்பதை விட முக்கியம் சுவாசத்தை சேர்த்து வைப்பது.

#மரம் நடுவோம், #மழை பெறுவோம், #பல்லுயிர் காப்போம்.